September 2, 2016

யாழ்.கச்சேரி முன் ஆளுநர் அலுவலக வாசலில் காத்திருக்கும் மக்கள்!! ஓட்டம் எடுத்த பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருக்கும் நிலையில் நீதி வழங்கத் தவறிய ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்து, காணமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பு இடங்களை விடுவிக்கக் கோரியும் மக்கள் பான் கீ மூனுக்கு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருந்தனர் மக்கள்.

யாழில் ஈபிடிபி அட்டகாசம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ் பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க வருகை தந்திருந்த போது காணாமல் போனவர்களின் உறவுகள், மற்றும் நில ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்டோர்,

மலேசியாவில் மஹிந்த ராஜபக்ஷயின் உருவ பொம்மை எரிப்பு??

மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பான் கீ மூனை சந்தித்தார் அமைச்சர் றிசாத் பதியூதின்; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு!

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்ற நிலையில், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

போலிக் கடவுச்சீட்டுடன் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இலங்கை பிரஜையொருவர் புனே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!!

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!! வவுனியா அருகே உள்ள மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (வயது23). விவசாயி. இவருடைய மனைவி துவாரகா(22). இவர்களது மகள் சகிதா(1). துவாரகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது சுலைமானின் நாக்கு தொங்கியது!! கொலையில் திடுக்கிடும் ஆதாரம்…!

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள்,

மீண்டும் சிறை யில் பிள்ளையான்…!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) பிணை மனுவை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார்.

தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறி விட்டது: ஒப்புக்கொண்டார் பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரித்திருந்தார்.

காலி கடற்கரையில் ஐ. நா செயலாளர் மனைவியுடன் செல்பி!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஐ.நா பொதுச்செயலர் இன்று யாழ்.வருகிறார்! - மூன்று இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பற்றி எழுதப்பட்ட ‘ஓர் வாழும் நாயகன்’ நூல் வெளியீடு!

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று இன்று வியாழக்கிழமை (01.09.2016) மாலை மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  தீரமானித்துள்ளது.

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது ; சிட்னியில் ஆர்ப்பாட்டம்!

46 வயதான இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை போராடினார்!

ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் அவர்கள் ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர் பார்த்தார்.தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் அருவியாற்றில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விரோதமான முறையில் கடற்படையினர் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில நபர்களும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா விண்ணில் செலுத்த இருந்த ஏவுகணை வெடித்தது!

அமெரிக்கா விண்வெளியில் செலுத்த இருந்த ஏவுகணை  புளோரிடாவில் பரீட்சார்த்த  சோதனை மேற்கொள்ளப்பட்ட போது வெடித்து விபத்துக்குள்ளானது.

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் - அரசாங்கம்!

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் கடற்படைமுகாமிற்கு இடமில்லை! இன்றைய கலந்துரையாடலில் எடுத்துரைப்பு!

இறுதிப்போர்  நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு: கோத்தபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெலிஓயாவை நெடுங்கேணியுடன் இணைத்து இனவிகிதாசாரத்தைக் குழப்ப முயற்சி!

முல்லைத்தீவு- வெலிஓயா பிரதேசத்தின் 3696 வாக்காளர்களை, நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு கிராமத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தை குழப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை - கண்டறிந்த சிறுவன் கிருதின் நித்தியானந்தம் சாதனை !

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும், இப்போதிருக்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புற்றுநோயாகவும் காணப்படுகின்றது.

இளைஞர்களே சமாதானத்தின் முக்கிய பங்காளர்கள்! - காலி மாநாட்டில் பான் கீ மூன்!

இளைஞர்களே நாட்டில் சமாதானத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் மிக முக்கிய பங்குதாரர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

மூவரை வெட்டிக் கொலை செய்தவரின் பிணை மனுவை நிராகரித்த யாழ். மேல் நீதிமன்றம்!

அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அந்தப் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து 31ஆம் திகதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வட்டக்கச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையா என்று விசாரணை!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பெண் ஒருவர்சடலமாக மீட்கப்பட்டதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நாளாகப் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று மீண்டும் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

நாமலுக்காக கொலைகளைச் செய்த இராணுவ கப்டன் மீது துப்பாக்கி பிரயோகம்!

கடந்த ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ஷவுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பான் கீ மூன் வருகைக்கு எதிராக கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன் பிக்குகள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவண பலய இன்று கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.

September 1, 2016

பாலன் தோழரின்;சிறப்பு முகாம் என்னும் சித்தரவதை முகாம்!

நூல் அறிமுக நிகழ்வு 27/08/2016 அன்று Auckland ,New Zealand ல் இடம் பெற்றது. சிரேஷ்டஊடகவியலாளர் S.M  வரதராஜன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புத்தர் சிலை!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் ; நாலக்க தேரர் மனு கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் பெங்கமுவே நாலக தேரரினால் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.

‘காணிகளை இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் வழங்க நாம் இடங்கொடுக்கமாட்டோம்”

வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற்பாடா நல்லிணக்கம்? இது இன நல்லிணக்கத்தின் அடையாளம் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் சாதாரண மக்களோடு காணாமல் போன இராணுவத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

யுத்த மோதல்களின் போது வடக்கில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், 5 ஆயிரத்து 600 படையினரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

நியாயத் தீர்வை எதிர்பார்த்து நிற்கும் காணாமல் போனோரின் உறவினர்கள்!

நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள ஆழமான வடுக்களில் காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவகாரமும் முக்கியத்துவம் மிக்கதாகும்.

மீண்டும் சுனாமியா! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும்வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச இன்று காலை  காவல்துறை நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய உட்பட 8 பேருக்கு நோடீஸ்!

எவன் காட் மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய இன்று நோடீஸ் அனுப்பியுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது!

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக சமூகமோ இனிமேல் வலியுறுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!

அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி;பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்!

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்.

மைத்திரி மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச பொலிஸ்!

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது.

யுத்த நினைவாலயம் அழிப்பு ; மஹிந்த சாடல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை மகிழ்ச்சிப்படுத்தவே குருநாகலில் உள்ள யுத்த வீரர்கள் நினைவாலயத்தை அரசாங்கம் அகற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

மொஹமட் சுலைமான் கொலை : 7 பேர் கைது!


கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்து வந்த செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வெள்ளை வான் பாணியில் பொலிசாரால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி: தாயார் கண்ணீர் கதறல் !

கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வந்தவுடன் ரணிலுடன் பேச்சு நடத்தினார் பான் கீ மூன்!

மூன்று நாள் பயணமாக நேற்றிரவு இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மனித உரிமைகள் தொடர்பான முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற விடமாட்டேன்! - மைத்திரி பிடிவாதம்!

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை முற்றாக அகற்றாமல் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.