April 22, 2014

தமிழ் இளையோர் அமைப்பு - பிரான்சு நடாத்திய பிரெஞ்சு மொழித்தேர்வு 2014!

பிரான்சு தமிழ்இளையோர் அமைப்பு பிரான்சு புறநகர் பகுதியில் வாழும் தமிழ் குழந்தைகளின் பிரெஞ்சு மொழியிலான அவர்களின் கல்விதிறனை தொடர்ந்து முன்னேற்றகரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பிரெஞ்சு பாடசாலைகளின் கல்வியையும், பரீட்சை வினாக்களையும், அடிப்படையாகக் கொண்டதொரு தேர்வினை நடாத்தியிருந்தனர். 19, 20 திகதி சனி, ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சோலை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அகவணக்கத்துடன் பரீட்சைகள் ஆரம்பமாகின. காலை 6 ம் வகுப்பினருக்குரிய பிரெஞ்சு மொழியும், மதியம் கணித பாடமும், பி.பகல் 3.00 மணிக்கு 3ம் 4ம் வகுப்பினருக்கான கணிதமும், சரித்திரமும், புவியியல் தேர்வும் நடாத்தியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு 5ம் வகுப்பினருக்குரிய பிரொஞ்சு மொழியும், கணிதமும் பிற்பகல் 3.00 மணிக்கு 3ம் 4ம் வகுப்பு மாணவமாணவியர்களுக்கு பிரெஞ்சு மொழிப்பரீட்சையும் நடாத்தப்பட்டது. இவ் இரண்டு நாள் பரீட்சைகளிலும் 300 வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்களுடன் இப்பரீட்சை சம்பந்தமாக தமிழ் இளையோர் அமைப்பினரும், ஆர்வலர்களும் கதைத்தபோது இவ்வாறான பரீட்சைகள் தமக்கு அவசியம் என்றும், தாம் பிரெஞ்சு பாடசாலையில் ஆசிரியர்களிடம் படிக்கும் போது சிலவேளைகளில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதுவும், அவற்றை நாம் விளங்கி இவ்வாற பரீட்சையில் செய்வது பெரும் உதவியாகவுள்ளது என்றனர். பெற்றோர்களும் இவ்வாறன கல்விச்செயற்பாடு புலம்பெயர்ந்த மண்ணில் எமது வாழ்வியலுக்கு மத்தியில் பெரும் உதவியாகவும், பணியாகவும் பார்க்கப்படுகின்றது என்றும் கூறியிருந்தனர். தொடர்ந்தும் இளையோர் அமைப்பு இளையோர்களுடன் பல்வேறு கருத்துக்களை மனந்திறந்து இரு பகுதியினரும் பகிர்ந்து கொண்டனர். ஆரோக்கியமான கருத்துப்பகிர்வாக இது அமைந்திருந்தது. அடுத்து வரும் ஆண்டுகளில் இப்பரீட்சைகள் பிரொன்சு மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்ல போவதாகவும் அதற்க்கான காரணத்தையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக பிரான்சு மண்ணில் வாழும் யுதஇனமக்கள் எவ்வாறு தமது இனத்தை வருங்கால சந்ததியை எவ்வாறு கல்வித்துறையில் உதவிசெய்து முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்கின்றார்களோ அதேபோல அரசியல், பொருளாதாரம், இனங்களுக்கு ஆற்றும் சமூகப்பணி, நாம் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருத்தல் இந்த நாட்டினதும், மக்களதும் நற்பெயரை பெறுதல், போன்ற பல்வேறு கருத்துப்பரிமாற்றங்கள், இன்றைய தமிழ்மக்களின் வாழ்வியல் பற்றியும் கதைக்கப்பட்டன. இளையோர்களின் அடுத்த கட்ட செயற்பாடுக்கும் வளர்ச்சிக்கும் பெற்றோர்களின் அளப்பரிய பங்கும், ஆதரவும் தேவை என்பதை இளையோர்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.













No comments:

Post a Comment