May 21, 2014

இந்தியாவிற்கு பிடிக்காத கொடியும், பிடித்த ‘பிரதமரும்’ - சேரமான்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கத்தையும் முற்றாகத்
துடைத்தழித்து ஈழத்தீவிலிருந்து தமிழினத்தைப் பூண்டோடு பிடுங்கியெறிவது சிங்களத்தின் இலக்கு என்றால், தமது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து தலையாட்டும் பொம்மைகளாக இயங்கக் கூடிய வீரியம் குறைந்த தலைமைகளை தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உருவகித்து, அவற்றின் ஊடாக ஈழத்தீவில் தனது ஆதிபத்தியத்தை நிலைநாட்டுவதே இந்தியாவின் இலக்காகவுள்ளது.
இதற்கான நீண்டகால நிகழ்ச்சித் திட்டத்துடன் இந்தியா செயற்படுவது பற்றியும், இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கத்துடன் பெங்களூரைத் தளமாகக் கொண்டியங்கும் ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழு ஆயுததாரிகளையும், முன்னாள் போராளிகளையும் உள்ளடக்கிய ஆயுதக் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுவது தொடர்பாகவும் எமது கடந்த பத்திகளில் குறிப்பிட்டிருந்தோம்.
ஏற்கனவே தனது சொல்லுக்குத் தலையாட்டக்கூடிய கைப்பாவை அமைப்பாக தமிழீழத் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், புலம்பெயர் தேசங்களில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற ருத்ரா கும்பலையும் இந்தியா இயக்கி வருவது இன்று உலகறிந்த இரகசியமாகிவிட்டது. சிங்களத்தின் படையாட்சி அடக்குமுறையின் விளைவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான வலுவான அமைப்பு எதுவும் இற்றைவரைக்கும் தமிழீழ தாயகத்தில் தோற்றம் பெறாத பொழுதும், புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரை நிலைமை அவ்வாறில்லை. 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் புலம்பெயர் தேசங்களில் பல்வேறு குழப்பங்களை விளைவித்து, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கத்தையும் சிதைப்பதற்குப் பல முயற்சிகளை இந்திய - சிங்கள அரசுகள் மேற்கொண்ட பொழுதும் அவை வெற்றியளிக்கவில்லை.
இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தமிழீழத் தேசியக் கொடி. மற்றையது உலகத் தமிழினத்திற்கு முகவரி கொடுத்த வரலாற்று நாயகனாக விளங்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
ஒரு நாட்டின் படை, ஆட்சி, தலைவன் ஆகிய மூன்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்பது தேசியக் கொடி. தமிழீழத் தேசத்தைப் பொறுத்தவரை அதன் கொடியாக விளங்கும் பாயும் புலிக்கொடி என்பது தமிழினத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. சோழ மன்னன் கரிகாற்பெருவளவனின் காலத்திலிருந்து ஈழத்துக் கரிகாலனாக விளங்கும் தலைவர் பிரபாகரன் வரையான தமிழினத்தின் வீர வரலாற்றையும், மாவீரர்களின் ஈகங்களையும், ஈழத்தமிழினத்தின் விடுதலை வேட்கையையும் குறியீடு செய்யும் தமிழீழத் தேசியக் கொடியானது மாவீரர்களால் போற்றப்பட்டு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தலைவணங்கி மரியாதை செய்யும் ஒன்றாகும்.

இவ்வாறு தமிழினத்தின் வரலாறாகவும், முகவரியாகவும், ஈழத்தமிழினத்தின் விடுதலை வேட்கையின் குறியீடாகவும் திகழும் தமிழீழ தேசியக் கொடியையும், தமிழீழ தேசியத் தலைவரையும் அகற்றினாலே ஒழிய தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கத்தையும் இல்லாதொழிக்க முடியாது என்பது தமிழினத்தின் எதிரிகளுக்கு நன்கு தெரியும். இதன் காரணமாகவே 2009 மே 18இற்குப் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டன. தலைவர் பிரபாகரனுக்கு மாற்றீடாகத் தமிழீழத்தில் இராஜவரோதயம் சம்பந்தனும், புகலிடத்தில் விசுவநாதன் உருத்திரகுமாரனும் களமிறக்கப்பட்டனர்.
தமிழீழ தாயகத்தில் வாளேந்திய சிங்கக் கொடியை உவகையோடு சம்பந்தர் உயர்த்திப் பிடிக்க, புலம்பெயர் தேசங்களில் தமிழீழத்தின் வரைபடத்தையும், செண்பகப் பறவையையும் கொண்ட புதிய கொடி ஒன்றை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் ருத்ரா கும்பல் இறங்கியது.
ஆனால் இம்முயற்சிகள் தமிழ் மக்களிடம் எடுபடவில்லை. விளைவு: சிங்கக் கொடியைக் கீழே போட்டுவிட்டுத் தமிழீழத் தேசியத் தலைவரை மாவீரன் என்று போற்றிப் புகழ்ந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குப் பிச்சை கேட்டது. புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்டு அரசியல் ரீதியில் அகால மரணமெய்திய நிலையில் வேறுவழியின்றி தமிழீழ வரைபடத்தை நோக்கி எழும் செண்பகப் பறவைக் கொடியைக் கைவிட்டு, அவசர அவசரமாகப் பாயும் புலிக்கொடியை ருத்ரா கும்பல் உயர்த்திப் பிடித்து இன்று புகலிடங்களில் ‘மம்மி’ அரசியல் செய்ய முற்படுகின்றது.
இவ்வாறான பின்புலத்திலேயே மீண்டும் தமிழீழ தேசியக் கொடியைத் தமிழினத்தின் பிரக்ஞையிலிருந்து அகற்றித், தமிழீழ தேசியத் தலைவருக்கு மாற்றீடாகத் தலைமைத்துவ பாகம் வகிக்க முற்பட்ட தோற்றுப்போன தமது கைக்கூலிகளுக்கு உயிரூட்டம் அளிக்கும் முயற்சிகளில் மீண்டும் தமிழினத்தின் எதிரிகள் இறங்கியுள்ளார்கள்.
இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் புலம்பெயர் தேசங்களில் அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட அமைப்புக்களும், 2009 மே 18இற்கு முன்னரான காலப்பகுதிகளில் மூச்சுவிடுவதற்குக் கூட வன்னியில் அனுமதி கோரியோரும் இப்பொழுது இதற்குத் துணைபோவதுதான். இதற்கான உதாரணமாக இவ்வாரம் பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வை நாம் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
பிரித்தானியாவில் அரசியல் பரப்புரைப் பணிகளை முன்னெடுக்கும் நிமித்தம் 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, அனைத்துலக தொடர்பகம் ஆகியவற்றின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டது பிரித்தானிய தமிழர் பேரவை. அன்று அதனை உருவாக்கியவர்களும், அதில் பணிபுரிந்தவர்களும் இன்று அவ் அமைப்பில் இல்லை என்பது வேறு கதை. ஆனால் அவ் அமைப்பு தோற்றம்பெற்ற நாள் முதல் அது பிரித்தானியா வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரித்தானியாவிற்கான அரசியல் பிரிவாகவே கருதப்படுகிறது.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சுகந்தகுமார் என்பவர், கேணல் சார்ள்ஸ் அவர்களின் தொடர்பாளர் ஊடாக ஆரம்ப காலங்களில் தமது அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு அடிக்கடி தகவல் அனுப்பி வந்தவர். தவிர இலண்டனில் நடைபெற்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டம் ஒன்றில், பொட்டு அம்மான் கூறிய ஒரேயரு காரணத்திற்காகவே அவ் அமைப்பில் தான் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று இன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமாக விளங்கும் ‘ரூட்’ ரவி என்றழைக்கப்படும் ரவி குமார் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர். தமிழீழ ஆய்வு நிறுவனம் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் என்று பெயர் மாற்றம் பெற்ற தமிழீழ அரசியல்துறையின் உப அமைப்பின் பொறுப்பாளராக விளங்கியவர். 1994ஆம், 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவுடனான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உதவியாளராகக் கடமையாற்றியவர்.
‘ஜெயசிக்குறுய்’ சமர்க் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதுவும் பொட்டு அம்மான் அவர்களால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இயக்கத்திலிருந்து விலகிய இவர் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாளன்று சிங்கள வான்படையின் வான்வழித் தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதை அடுத்து, புதிய அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற பா.நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர். ஏற்கனவே இயக்கத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காரணமாக அமைப்பை விட்டு விலகியவர் என்ற வகையில் இவருடன் தொடர்பைப் பேணுவதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் நலனைக் கருத்திற் கொண்டு, இவருடன் ‘ஓடும் புளியம் பழமுமாக’ தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தொடர்பைப் பேணினார்.
இருந்த பொழுதும் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழத் தேசியத் தலைவரினதும் உண்மையான விசுவாசியாகக் காண்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இவர் முயற்சி எடுக்கத் தவறவில்லை. தவிர, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பா.நடேசன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து அவரது அனுமதியையும், ஆலோசனையையும் பெற்றே  பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற தோற்றப்பாட்டைப் புலம்பெயர் தேசங்களிலும், வன்னியிலும் இவர் காண்பிக்கத் தவறவில்லை.
இதற்கான உதாரணங்களாகவும், ஆதாரங்களாகவும் 2008ஆம் ஆண்டு இவரால் வன்னிக்கு, அதுவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு, எழுதப்பட்ட சில கடிதங்களின் தமிழ் மொழியாக்கங்களை இங்கே தருகின்றோம். இவை பற்றிப் பகிரங்க விவாதிப்பதற்கும், எம்மிடம் உள்ள ஏனைய ஆவணங்களை வெளியிடுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். இதில் முதலாவதாக தென்னாபிரிக்காவில் தமிழீழ அரசியல்துறையின் உப செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கும், அதனைப் பொறுப்பேற்றுத் தானும் பிரித்தானியத் தமிழர் பேரவையும் நடத்துவதற்கும், வன்னிக்கு ஆவணம் ஒன்றை அனுப்புவதற்கு முன்னர் 05.04.2008 பா.நடேசன் அவர்களுக்கு இவர் எழுதிய கடிதத்தின் தமிழ் மொழியாக்கத்தைக் கீழே தருகின்றோம்:
“வணக்கம் அண்ணா,
நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.
அங்கு நிலைமை கடுமையாக மாறிவருவதாக நான் அறியும் நிலையில் உங்களுடன் தொடர்பு கொண்டு சில தகவல்களைத் தர விரும்புகிறேன். போராட்டத்திற்கு இது சில நன்மைகளைக் கொண்டு வரும் என நம்புகின்றேன். தயைகூர்ந்து உங்களுடன் உரையாடுவதற்கு சில நிமிடங்கள் தருவீர்களா?
நிலைமை சிக்கலாக இருப்பதும், நீங்கள் வேலைப்பளுவுடன் இருப்பதும் எனக்குத் தெரியும். உங்கள் பெறுமதியான நேரத்தை நான் வீணடிக்க மாட்டேன்.
உங்கள் பதிலை எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி
ரவி.”
From: V Ravi <ravised@hotmail.co.uk>
Date: Sat, Apr 5, 2008 at 4:58 PM
Subject: Contact
To: NadaAnna <XXXXXXXXXXXXX@XXXXXXXX>
  
Vanakkam Anna
 
Hope you are well. 
 
As I hear the things are becoming very intense there I would like to contact you and pass some information. Hope it would bring any good for the struggle. Can you please give  me few minutes to talk to you?
 
It is a complex situation and understand you are very busy. I won't take much of your precious time.
 
Looking forward to hearing from you.
 
Nandri
 
Ravi
இதனைத் தொடர்ந்து மறுநாள் 06.04.2008 அன்று பிறிதொரு ஆவணத்திற்கான படங்களை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு அனுப்பி வைக்கும் பொழுது இன்னுமாரு கடிதத்தையும் இவர் எழுதினார்:
“வணக்கம் அண்ணா,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிழற்படத் தொகுதியைப் பார்க்கவும். இவற்றை உங்களின் கருத்தைப் பெறுவதற்காக ஜவான் ஊடாக ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். இது பற்றியும், மேலும் சில முக்கியமாக இருக்கக்கூடிய விடயங்கள் பற்றியும் உங்களுடன் தொடர்பு கொள்ள முற்பட்டேன். எந்தவொரு முக்கியமான விடயத்திற்கும் உங்களின் சாதகமான சமிக்ஞை எனக்குத் தேவைப்படுகிறது. இது தார்மீக ரீதியில் இங்கு எமது பணிகளை முன்னெடுப்பதற்கு வலுவூட்டுவதாக அமையும்.
அத்துடன் எமது சுதந்திரப் போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபட மாட்டேன் என்பதை உங்களுக்கும், எமது தலைமைப்பீடத்திற்கும் நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். இவை பற்றி உரையாடுவதற்காக உங்கள் தொடர்பிற்காகக் காத்திருக்கிறேன்.
நன்றி
ரவி”
From: V Ravi <ravised@hotmail.co.uk>
Date: Sun, Apr 6, 2008 at 12:07 PM
Subject: Part 1
To: NadaAnna <XXXXXXXXXXXXX@XXXXXXXX>
  
Vanakkam Anna
 
Please find the attached file of photos. I have already sent this through Javan for your comments. I tried to communicate with you about this and some other matters which may be important, I would like to get your positive signal for any important matters. This would morally strengthen our activities here.
 
I also want to reassure you and our leadership that I would never do or thing any harm to our struggle for Independance.
 
Awaiting your contact to discuss those matters.
 
Nandri
 
Ravi
இக்கடிதத்தை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு ரூட் ரவி அவர்கள் எழுதிய பொழுது தென்னாபிரிக்க அரசாங்கத்துடன், அதுவும் தென்னாபிரிக்க அரசாங்கத்தில் அமைச்சராக விளங்கிய படையாட்சி அவர்களுடன், பிரித்தானியத் தமிழர் பேரவை தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தொடர்பைப் பயன்படுத்தித் தென்னாபிரிக்காவில் தமிழீழ அரசியல்துறையின் உப செயலகம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று ரூட் ரவி அவர்களின் தலைமையில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் வகுக்கப்பட்டிருந்தது. இது பற்றிய ஆவணத்தை 19.04.2008 அன்று பா.நடேசன் அவர்களுக்கு ரூட் ரவி அனுப்பினார். ‘புறொஜெக்ட் ஆக்ஷ்போர்ட்’ என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட இவ் ஆவணம் பத்தொன்பது பக்கங்களைக் கொண்டது. இதனை இப்பத்திரிகையில் வெளியிடுவது சாத்தியமில்லை என்றாலும், மக்களின் பார்வைக்காக இணைய வழிகளில் இதனை வெளியிடுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
இத்திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்டது என்பது வேறு விடயம். ஆனால் இது பற்றி நாம் இங்கு குறிப்பிடுவதன் காரணம், தமக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை இருப்பதாகச் சாக்குப் போக்குக்கூறியும், இவ்வாரம் இலண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை மறுத்தமையும், பின்னர் மேடையில் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் உருத்திரகுமாரன் உரையாற்றுவதற்கு இடமளித்தமையும் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமக்குத் தொடர்பு எதுவும் இருக்கவில்லை என்று இப்பொழுது கூறும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி எதற்காக அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரின் ஆலோசனையைப் பெற்றார்?
சரி. தென்னாபிரிக்காவில் அரசியல்துறையின் உப செயலகத்தை திறப்பதற்காக மட்டுமே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரின் ஆலோசனையை ரூட் ரவி பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் 2008ஆம் ஆண்டு இலண்டனில் கறுப்பு யூலை நிகழ்வை நடாத்துவதற்கு பா.நடேசனின் ஆலோசனை கோரி இன்னுமொரு கடிதம் ஒன்றை ரூட் ரவி அவர்கள் அனுப்பியிருந்தார். 30.05.2008 அன்று எழுதப்பட்ட அக்கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு:
“வணக்கம் அண்ணா,
இத்துடன் உங்கள் கவனத்திற்காக 83 கறுப்பு யூலை பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளேன். தமிழ் - சிங்களப் பிரச்சினை பற்றிய பரந்த பார்வையை உலக மட்டத்தில் ஏற்படுத்திய நிகழ்வு என்ற வகையில் இதனை நாம் மறக்க முடியாது.
இதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, கடந்த கால நினைவுகள் இரைமீட்கப்பட்டு, சிங்கள ஆட்சியாளர்களின் கொடூர அடக்கு முறைக்கு தமிழர்கள் எவ்வாறு ஆளாகின்றார்கள் என்பதை உலக மக்களுக்கு நாம் கூற வேண்டும். இனப்படுகொலை பற்றி யூதர்கள் நினைவு மீட்கும் நடவடிக்கைகளுடன் இதனை ஒப்பிடுமாறு தயைகூர்ந்து உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கான நினைவு நிகழ்வைப் பெருமெடுப்பில் நடத்துவதற்கான ஆலோசனையை தயைகூர்ந்து வழங்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
ரூட் ரவி”
From: V Ravi <ravised@hotmail.co.uk>
Date: Fri, May 30, 2008 at 1:50 PM
Subject: Black July83
To: <XXXXXXXXXXXXX@XXXXXXXX>, <XXXXXXXXXXXXX@yahoo.co.uk>
Cc: Thamilanban <thamilanban@hotmail.com>
Vanakkam Anna,
 
Please find below black July 83 for your information. This event should not be forgotten as this has created a wider understanding of the Sinhala Tamil issue all over the world. 
 
This has to be given prominence and the past has to be reminded to the people all over the world to tell how the Tamils are subjected to the tyranny of the Sinhala rulers. Please compare how the Jewish community reminds the holocost in every possible occasion.
 
Please give us your advice on holding this event in a big scale.
 
Awaiting your reply

Anpudan
ROOT Ravi 

http://www.blackjuly83.com/

In commemoration of its 25th Anniversary, this forum aims to present
an archive of news reports, statements, pictures and testimonials
while providing survivors, families of victims and expatriates from
the 1980's exodus an opportunity to record their story. The collective
effort of Canadians and Tamils around the world will help to sustain
the memories of the victims and the truths of the genocide so that
Black July will never be forgotten.
If you, your relatives or friends have experiences of this tragic time
that you would like to share, please submit on the website:
http://www.blackjuly83.com/Survivors.htm
இவ்வாறு அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனையும், அனுமதியையும் பெற்று தமது அரசியல் செயற்பாடுகளை பிரித்தானியாவில் முன்னெடுத்த பிரித்தானிய தமிழர் பேரவை, இன்று தமிழீழத் தேசியக் கொடியைத் தூக்கியெறிந்து விட்டு, தமிழீழ தேசியத் தலைவருக்கு மாற்றீடாக உருத்திரகுமாரனை மேடையேற்றியிருப்பதன் மர்மம் என்ன?
எதிர்காலத்தில் பிரித்தானியாவில் அரசியல் கட்சியாக உருவெடுத்து பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றி, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை சிதைப்பது பிரித்தானிய தமிழர் பேரவையின் நீண்டகால நோக்கம் என்கிறார்கள் சிலர். அதற்காகவே இதுநாள் வரை தாம் அணிந்திருந்த புலித்தோலை வீசியெறிந்து விட்டு ‘சுத்தமான சூசைப்பிள்ளைகளாக’ இவர்கள் தீக்குளித்துப் புலிச்சாயம் அற்ற தமது ‘கற்பை’ மேற்குலகிடம் நிரூபிக்க முற்படுகின்றார்கள் என்கிறார்கள் இவர்கள். இதில் உண்மை இருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
இதுவரை தாம் போர்த்திருந்த புலித்தோலை உரிந்து விட்டு வெள்ளைச்சாயம் பூச முற்படும் பிரித்தானியத் தமிழர் பேரவையினர், எதற்காக இன்றும்கூட ஒப்புக்கு புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தன்னைத் தமிழீழ தேசியத் தலைவரின் சட்ட ஆலோசகர் என்று கூறிக்கொள்ளும், இந்திய உள்ளகப் புலனாய்வு நிறுவனமான ஐ.பி அமைப்பின் முகவராகவும், ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் தலைவரான பரந்தன் ராஜனின் நண்பனாகவும் விளங்கும் உருத்திரகுமாரனை மேடையில் ஏற்ற வேண்டும்? புலிக்கொடியை ஏற்றுவது தவறு என்றால் புலித்தோல் அணிந்த நரியாக வேடமிட்டிருக்கும் உருத்திரகுமாரனை மேடையில் ஏற்றுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் ஆகும்?
புதிர்கள் போன்று தென்படக்கூடிய இக்கேள்விகளுக்கான விடை உண்மையில் இலகுவானது. இந்தியாவிற்கு புலிக்கொடி பிடிக்காது: ஆனால் உருத்திரகுமாரனைப் பிடிக்கும். எனவே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானியத் தமிழர் பேரவை வீசியெறிந்து விட்டது. அதே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காகவே உருத்திரகுமாரனையும் மேடையேற்றியுள்ளது.
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment