December 26, 2014

யாழ் பிரபலப் பாடசாலையில் தமிழ் பாடம் போதிக்கும் ஆசிரியர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவு!

யாழ் பிரபலப் பாடசாலையில் தமிழ் பாடம் போதிக்கும் ஆசிரியர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன் அப் பெண்களிடம் இருந்து பெருமளவு பணத்தையும் ஏமாற்றிப் பெற்றுக்
கொண்டு பெரும் லீலைகள் செய்து வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.
யாழ் பிரபலப் பாடசாலையில் ஆசிரியா் என்ற பெயரையும் இசைக் குழுவில் கிற்றார் வாசிப்பவா் என்னும் தகுதியையும் வைத்துக் கொண்டு தன்னைக் கலியாணம் கட்டாத வாலிபா் என இளம் யுவதிகளை ஏமாற்றி அவா்களைக் காதலிப்பது என்ற போர்வையில் தன்னால் ஓரிருநாட்களுக்கு வாடகைக்கு எடுத்து வைத்த வீட்டில் தனது வீட்டு என்று சொல்லி அந்த யுவதிகளை அழைத்துச் சென்று பாலியலுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அத்துடன் அந்த யுவதிகளை தனது கைத் தொலைபேசியில் பாலியல் உறவு கொள்ளும் நேரம் புகைப்படங்கள் எடுத்து அதனை வைத்து அந்த யுவதிகளை அச்சுறுத்தி அவா்களிடம் பணத்தையும் நகைகளையும் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான குறித்த 37 வயதுடைய ஹென்றி குறித்த ஒரு நிறுவனத்தில் கணனிக் கற்கச் சென்ற வேளை அந் நிறுவனத்தில் கற்பித்த திருமணம் முடித்து விவாகரத்துப் பெற்ற ஒரு குழந்தையின் தாயான ஆசிரியையையும் தனது காதல் வலையில் வீழ்த்தி , ஏமாற்றி பாலியலுறவு கொண்டு அதனை வைத்து ஆசிரியையிடமும் பணம், நகைகள் பெற்றுமுள்ளார்.
இதே வேளை இன்னொரு பாடசாலையில் தொழில் புரியும் ஒரு பெண்ணையும் இவா் இவ்வாறுஏமாற்றி தொடா்ந்து அச்சுறுத்தி பணம் பறித்து வருவதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் திருமணமாகாதவா் எனக் கூறி இவா் பிரபல பாடசாலையில் கற்பிக்கு ஆசிரியையும் ஏமாற்றியுள்ளதுடன் அப் பாடசாலையில் குறித்த ஆசிரியை விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக இருப்பதால் அவ் ஆசிரியையை அச்சுறுத்தி சில மாணவிகளின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று அவா்களுடன் தொடா்பு கொண்டும் தனது திருவிளையாடல்களை முடித்துள்ளார் குறித்த தமிழ் வாத்தியார்.
கடந்த சில வருடங்களாக இவா் செய்துவரும் திருவிளையாடல்களால் பெருமளவு யுவதிகளும் குடும்பப் பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு உள்ளாகியதாகவும் தெரியவருகின்றது. தமது மானப் பிரச்சனை என்பதால் பொலிசாரிடமோ வேறு எவரிடமோ சொல்ல முடியாத நிலையில் இப் பெண்கள் தவித்து வந்துள்ளனா்.
இதே வேளை பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் பொலிசாரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஹென்றி கற்பிக்கும்  பாடசாலைக்கு இது தெடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறித்த கல்லுாரி ஆசிரியரை தமது கல்லுாரியில் இருந்து நீக்கியுள்ளதாக கல்லுாரி அதிபா் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.Jaffna
.

No comments:

Post a Comment