March 4, 2015

உலகளாவிய வகையில் 14 நாடுகளில் ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு, ஒரே சான்றிதழ் வளர்தமிழ் பாடத்திட்டஅனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2015!!

TEDC SYLLABUS INTERNATIONAL TAMIL GENERAL EXAMINATION 2015
06/06/2015 சனிக்கிழமை காலை 10.00 மணி
தேர்வு நிலைகள் - வளர்தமிழ் 1 தொடக்கம் - வளர்தமிழ் 12 வரை
(பதின்னான்கு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் யூன் (June) மாதத்தில் வருகின்ற முதல் சனிக்கிழமையில்)
• புலன்மொழி வளத்தேர்வு – கேட்டல், பேசுதல், வாசித்தல் திறன்களுக்கான

மதிப்பீடு மே மாதம் 02,03,09&10 May 2015 காலப்பகுதியில் நடைபெறும்
• விண்ணப்பப்படிவத்தினையும் கடந்தகால தேர்வு வினாத்தாள்களையும் www.tedc.co.uk/past-papers-online/ இலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
• ஐக்கிய இராச்சியத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்கு வசதியாக மேற்கு, கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு,வெளிமாவட்டம் என ஐந்து பிராந்தியங்களில்; ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு நிலையங்களில் உலகளாவியரீதியில்நடைபெறும் ஏனையமொழித்தேர்வுகள் போன்று நடைபெறும.;
• தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மொழியால் ஒன்றிணையும் எமது சந்ததியினருக்கு ஏற்றவகையில்பதின்னான்கு நாடுகளில் (U.K, France, Germany, Norway, Denmark, Italy, Belgium, Netherland, Sweden, Canada, New Zealand, Australia, Singapore, Mauritius) நாற்பதினாயிரத்திற்கும்;(40,000)மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு, ஒரே சான்றிதழ் என்னும் உயர் நோக்கோடு செயற்பட்டுவருகிறது.
• ஐக்கியராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் சேர்ந்தியங்கும் 70க்கு மேற்பட்ட பள்ளிகளில்7000 க்கு மேற்பட்ட மாணவர்கள் எமது வளர்தமிழ் பாடத்திட்டத்தைப் பின்பற்றி எம்மால் நடாத்தப்படும் தேர்வுக்குத்;தோற்றுகின்றனர்.மிழ் நான்கு திறன்களையும் (கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல்) மேம்படுத்தும்; வளர்தமிழ்பாடத்திட்டம்.
• வளர்தமிழ் பாடநூல்கள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை ஒருங்கே வளர்க்கும்பொருட்டு ஒலிவட்டு, பாடநூல், பயிற்சி நூல் என மூன்று பகுதிகளில் அமைந்துள்ளது.
• Cambridge GCSE(O/L),G.C.E(A/L -UCAS points 140 பெறக்கூடியதாயுள்ள) தேர்வை எழுதுவதற்குவளர்தமிழ் பாடநூல்கள் மிகவும் துணைபுரிகின்றன.
விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி 31.03..2015 இற்கு முன்பதாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
• தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளை முதல்முறையாக சென்ற ஆண்டு (2014) இல்நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்த்தேர்வில் அதிதிறன்(1+) பெற்ற மாணவர்களைப் பொதுமேடைக்கு அழைத்துஅவர்களுக்கு பரிசுக்கிண்ணங்களை வழங்கிப் பாராட்டியது. அத்துடன் பணிஅடிப்படையில் ஐந்து(5), பத்து(10),பதினைந்து(15) ஆண்டுகள் பணிபுரிந்த 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் கடந்த 25.01.15 அன்றுபிரமாண்டமான மண்டபத்தில் நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவுக்கு வருகை தந்திருந்தனர்.
• கடந்த பெப்ருவரி மாத நடுப்பகுதியில் தமிழ்த்திறன் போட்டிகளான பேச்சு (12 பிரிவுகள்), கட்டுரை (08 பிரிவுகள்),திருக்குறட்போட்டிகள்; (05 பிரிவுகள்); வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கிடையேயானபோட்டியாக நடைபெற்றது. இப்போட்டிகளில் ஐக்கிய இராச்சியததின் வளர்தமிழ் தமிழ்ப்பள்ளிகளில் இருந்துமாணவர்கள் பங்குபற்றியிருந்தனர.; முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கிண்ணங்களும்பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் அன்றே வழங்கப்பட்டன. மூன்று தமிழ்த்திறன்போட்டிகளும் (பேச்சு, கட்டுரை, திருக்குறள்) ஒரேநாளில் ஒரே இடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுகுறிப்பிடத்தக்கது.
மேல் நிலைக்கல்வி

தமிழ் இலக்கியமாணி பட்டயக்கல்வி -B.T.L-Batchelor of Tamil Literature
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வளர்தமிழ் 12 முடித்த மாணவர்களுக்காக பட்டயக்கல்வி (Bachelor of Tamil Literature) கற்கைநெறியையும் தொடங்கியுள்ளது. இப்பட்டயக்கல்வியைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை(ஐஇ)யுடன் தொடர்பு கொண்டு பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை-ஐக்கிய இராச்சியம் TEDC U.K
Tamil Education Development Council– United Kingdom- TEDC U.K
162 Franciscan Road, London SW17 8HH
020 8432 6999 / 07771 753525
www.tedc.org.uk
info@tedc.org.uk

No comments:

Post a Comment