May 16, 2015

அர்மேனிய இனப்படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்துடன் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை!(படங்கள் இணைப்பு)

அர்மேனியன் இனப் படுகொலை நடந்து 100 வருடங்கள் கடந்து விட்டது . உலகளாவிய ரீதியில் ஆர்மேனிய மக்கள் மீது நடந்தேறிய இனஅழிப்பின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் பல நாடுகளில் சிறப்பாக 
முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் அர்மேனியன் இனப் படுகொலையை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என கோரி மாபெரும் பேரணி சென்ற மாதம் நடைபெற்றது . அன்றைய தினம் கொல்லப்பட்ட அர்மேனியன் மக்களுக்கு வணக்க நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டது . வணக்க நிகழ்வில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் கலந்துகொண்டு அர்மேனியன் மக்களுக்கான தோழமையையும் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது .
 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த பின்னரும் 100 வருடங்கள் கடந்தும் புலம்பெயர் அர்மேனியர்களின் உறுதியான விடுதலை உணர்வால் 20 சர்வதேச நாடுகள் அவர்களுக்கு நடந்த இனப் படுகொலையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் .இதுவே நாம் அர்மேனிய மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் . அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் ஆகிய நாம் உறுதியோடு இடைவிடாது உழைபோமானால் நிச்சயம் தமிழீழம் மலர்ந்தே தீரும் .
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை


No comments:

Post a Comment