July 28, 2015

சட்டத்தை மதிக்காத வடக்கு தனியார் பஸ்கள்; அரச பேருந்துகள் மீதும் தாக்குதல்கள்.!

சட்டத்தை மீறுகின்ற வகையில் செயற்படும் தனியார் போக்குவரத்து பேருந்துகளினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண சாலை
முகாமையாளர்கள். இது தொடர்பில் உடனடியாக வடக்கிலுள்ள அரச அதிபர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவையின் போது எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் சம்பந்தமாகவும், எதிர்கால சேவைகள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தன.
வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து பஸ் சேவை, இலங்கை போக்குவரத்து பஸ் சேவை என்பன 60 க்கு  40 எனும் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. தனியார் போக்குவரத்து சேவை 60 வீதமாகவும் இலங்கை போக்குவரத்து சேவை 40 வீதமாகவும் உள்ளது. இது முதலில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் 50 க்கு 50 என்ற வீதத்திலேயே சேவைகள் இடம்பெறுகின்றன.
வடக்கில் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகள்  ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையிலேயே சேவையில் ஈடுபடுகின்றன. மற்றும் கணிசமானவை தற்காலிக அனுமதி பத்திரத்துடனேயே சேவையில் ஈடுபடுகின்றறன. இந்த பேருந்துகள் அனைத்தினதும் சேவைகள் முதலில் ரத்து செய்யப்படல் வேண்டும். தனியார் பேருந்துகள் சரியான நேர அட்டவணை அடிப்படையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றன.
யுத்த காலத்தின் போது இலாபம் பாராது சேவையாற்றிய நாம் தனியார் பஸ்களின் சட்டவிரோத செயற்பாடுகளினால் தற்போது பெரும் நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றோம் உள்ளூரில் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களில் பெரும்பாலானவை உரிய கட்டணத்தை அறவிடாமல் பர்ருச்சீட்டினையும் வளங்கமால் சேவையில் ஈடுபடுகின்றன. இதனால் அரச போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இது தவிர அரச போக்குவரத்து பஸ்கள் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று  வருகின்றன. இவை தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டும் பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இது தவிர தனியார் போக்குவரத்து சபையினரின் சட்டவிரோத போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கில் உள்ள அரச அதிப்ரகளிடம் முறையிடப்பட்டும் எவ்வித பிரயோசனமும் இல்லை.
இவ்வாறு இவை தொடர்பில் அனைத்து தரப்பும் எமது விடயத்தில் மௌனம் சாதித்தே வருகின்றனர். என அவர்கள் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம செயலாற்று பிரதம செயலாற்று அத்தியட்சகர் உபாலி கிரிபத் தொடுவ தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பிராந்திய செயலாற்று முகாமையாளர் கே.கேதீசன், பிராந்திய பொறியியல் முகாமையாளர் எஸ்.பாஸ்கரன், பிராந்திய கணக்காய்வாளர் ஆர்.செல்வராசா, பிராந்திய கணக்காளர் கே.அழகேசர் ஆகியோரும்,
யாழ்.சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், கிளிநொச்சி சாலை முகாமையாளர் எஸ்.ஜீவானந்தம், மன்னார் சாலை முகாமையாளர் எச்.சாஜி, காரைநகர் சாலை முகாமையாளர் ஆர்.ஜெயராஜா வவுனியா சாலை முகாமையாளர் எச்.எம்.ஜே.சொய்ஸ், பருத்தித்துறைசாலை முகாமையாளர் கே. கந்தசாமி, முல்லைத்தீவு சாலை முகாமையாளர் கே.சீனிவாசகம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment