September 2, 2016

மீண்டும் சிறை யில் பிள்ளையான்…!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) பிணை மனுவை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார்.


கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரைகாலமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்த சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனு மீதான விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி பிணை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.



No comments:

Post a Comment