September 1, 2016

வடக்கில் சாதாரண மக்களோடு காணாமல் போன இராணுவத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

யுத்த மோதல்களின் போது வடக்கில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், 5 ஆயிரத்து 600 படையினரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.


கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் சம்பந்தமான தேசிய தின அனுஷ்டிப்பில் கலந்து கொண்டு பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இதனை கூறியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது வடக்கில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், 5 ஆயிரத்து 600 படையினரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும்.

கடந்த காலத்தை தோண்டி எடுத்து, மீண்டும் புண்ணை பெரிதாக்க தயாரில்லை என்றாலும் பெற்றோர் உட்பட உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களை மறக்க தயாரில்லை என்பதால், அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

நாங்கள் மறக்க தயாராக இருக்கின்றோம். ஆனால், பெற்றோர் தமது அன்புக்குரியவர்களை மறக்க தயாரில்லை என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய போது, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்ட எதிர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1989 ஆம் ஆண்டுகளில் காணாமல் போக செய்தமைக்கு எதிராக நாட்டிற்குள் மாத்திரமின்றி, சர்வதேசத்திற்கும் சென்று குரல் கொடுத்த மனித உரிமை வீரர், தற்போது எப்படி அதற்கு எதிராக கொள்கையை பின்பற்ற முடியும்?.

சில நேரம் அவர்கள் வரலாற்றை மறந்திருக்கலாம். சில நேரம் சட்டமூலத்தை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment