September 2, 2016

பான் கீ மூனை சந்தித்தார் அமைச்சர் றிசாத் பதியூதின்; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் முஸ்லிம் சமூகமும் மோசான முறையில் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியூதின், வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழ்வதாகத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் குடியேற்றத்துக்கும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்களில் அனைத்து இனங்களும் பாதிக்கப்படாத வகையிலான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியூதின் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பான, புள்ளி விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தூதுக்குழுவினர் கையளித்துள்ளனர்.

No comments:

Post a Comment